பிரதமர் வேட்பாளராக திரு.மோதியை பா.ஜ.க அறிவிப்பதற்கு பல மாதங்கள் முன்பே, பாரதப்பிரதமராக மோடி பொறுப்பேற்பார் என பிரிட்டிஷ் உளவு அமைப்பான SIS (MI6) இங்கிலாந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள The Guardian நாளிதழ் கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் இவ்வறிக்கை சமர்பிக்கபட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்திராகாந்தியை விடவும் அதிகாரம் மிக்க பிரதமராக மோதி திகழுவார் எனவும்,
இந்திய வெளியுறவு கொள்கை மிகப்பெரிய அளவிள் மாற்றமடைவதோடு சுய சார்புடையதாக இருக்கும் எனவும் அப்போதும் இந்தியாவுடனான உறவை பாராமரிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சர்வேதேச ஆளுமை குறைந்து பொருளாதார மற்றும் பாதுகாப்பு தளங்களிள் பின் தங்கிய அந்த நாடு மோதியின் தலைமையில் மீளவும் சர்வதேச தளத்திள் தவிர்க்க இயலாத வகையில் உருவாவதோடு, ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் பெறுவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளிள் முனைப்போடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
அமெரிக்காவுடனான உறவை பொருத்த மட்டில் 20-ஆம் நூற்றாண்டின் இறுதி நிலைக்கே இந்தியா திரும்பும் என அந்த அறிக்கை சூசகமாக தெரிவித்துள்ளது!
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.