இந்தத்தேர்தல், மாற்றத்தை கொண்டு வருவதற்காக நடைபெறுகிறது”

May-8-14

ஊழல்புரிந்த காங்கிரஸ் கட்சி தான் கீழ்த்தரமான அரசியல் செய்துவருகிறது, மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தினந்தோறும் புதிய குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்திவருகிறார்கள்’ என்று பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

பிகார் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2 தேர்தல்பிரசார பொதுக் கூட்டங்களில் மோடி பங்கேற்று ஆற்றிய உரை:

காங்கிரஸ்கட்சி தற்போது மோசமான நிலையில் உள்ளது. ஆகையால் அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் மீண்டும் வெற்றிபெற வைக்க அக்கட்சி கடுமையாக போராடிவருகிறது.

கிடங்குகளில் வீணாக கிடக்கும் தானியங்களை ஏழைகளுக்கு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அதை பொருள் படுத்தாமல், மதுபான தொழிற்சாலைகளுக்கு அவற்றை வழங்கியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது கழிப்பறையில் பயன் படுத்தப்படும் காகிதங்களிலும் ஊழல் நடைபெற்றது.

இந்திய ராணுவப்படை வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் துண்டித்தது. ஆனால் மத்திய அரசு பாகிஸ்தான் பிரதமருக்கு பிரியாணி வழங்கி உபசரித்தது.

மின் உற்பத்திக்காக பயன் படுத்தப்படும் நிலக்கரியை வைத்து ஊழல் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம்தான் கீழ்த்தரமான அரசியல். இதற்கு காங்கிரஸ்கட்சி மன்னிப்பு கேட்கத்தயாரா?

மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தினந்தோறும் புதிய குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்திவருகிறார்கள்.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இந்தத்தேர்தல், மாற்றத்தை கொண்டு வருவதற்காக நடைபெறுகிறது. ஆகையால், பா.ஜ.க வேட்பாளர்களை அதிகமாக நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தங்களது தொகுதிகளுக்கு தேவையான குடிநீரைக்கூட வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service