இங்கிலாந்தைதொடர்ந்து, ஆஸ்திரேலியாவும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேட்ரிக் ஷக்லிங் ஆமதாபாத் காந்திநகரில் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துபேசினார். அப்போது நரேந்திர மோடியை ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டுகொள்கை மற்றும் சுமூகஉறவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இருநாடுகளும் பல்வேறு விஷயங்களில் இணைந்துசெயல்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சிபணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மோடியிடம் ஆஸ்திரேலியதூதர் கூறினார்.
மேலும் இருநாடுகள் இடையே கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பால்பொருள்கள், தொழில்நுட்பம், தண்ணீர் மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
செப்டம்பர் மாதம் குஜராத்தில் ‘சர்வதேசதொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2015’ நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலிய தூதருக்கு மோடி அழைப்பு விடுத்தார்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.