பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பாரதீய ஜனதா தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடந்த என்கவுண்ட்டர் நடவடிக்கைகள் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுகிறது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சிராவுதீன் என்கவுண்ட்டரை மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவுதான் நடத்தியது.
நரேந்திரமோடி, அத்வானி போன்ற தலைவர்களை ஒழித்துக்கட்டுவதற்காக பாகிஸ்தானில் இருந்து 2 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக இந்திய நுண்ணறிவு பிரிவுக்கு கிடைத்த தகவலை ஆதாரமாக கொண்டுதான் மேற்கண்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டது.
ஆனால் அந்த நடவடிக்கைகள் போலி என்கவுண்ட்டர்கள் என்று மாற்றப்பட்டு நரேந்திரமோடி, அமித்ஷா, குலாப்சந்த் கடாரியா ஆகியோருக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது. இதில் சில மத்திய மந்திரிகள், காங்கிரஸ் நிர்வாகிகளால் சி.பி.ஐ., தேசிய நுண்ணறிவு அமைப்பு மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் கவனம் செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும். இந்த தவறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால் அது இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் கேடை விளைவிக்கும்.
இவ்வாறு கடிதத்தில் அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.