ஆற்றல் சக்தி – ஆற்றல் உற்பத்தியே மாநிலத்தின் சக்தி”

February-6-14

வெளிப்படைத் தன்மை, திறமை.. இந்த இரண்டும்தான் குஜராத் மக்கள் அதிகம் வேண்டியது. இன்று அவை உடனுக்குடன் அவர்களுக்கு கிடைக்கிறது, உண்மையான அக்கறையுடன்.

மாநிலத்தின் ஒவ்வொரு வீடும் இன்று ஒளியில் மின்னுகிறது, நரேந்திர மோடி அரசின் அளவற்ற ஆற்றல் உற்பத்தி காரணமாக. 2000 தொடங்கி 2011 வரை குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. 2012-ல் மின் உற்பத்தி 21000 மெ வா ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அது நடந்தும்விட்டது. இந்தியாவின் ஆற்றல் மையமாகத் திகழ்கிறது குஜராத். அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவின் மொத்த ஆற்றல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை உற்பத்தி செய்யும் திறனுள்ள மாநிலமாக குஜராத் திகழும்.

ஆற்றல் சக்தியில் குஜராத் இந்த சாதனையை நிகழ்த்த காரணமான நான்கு காரணிகள்…

 • காற்றாலை மின் சக்தி
 • சூரிய மின்சக்தி
 • மின்சக்தி உருவாக்கம்
 • உயிரி ஆற்றல்

குஜராத்தின் கிராமங்கள் முழுமையையும் மின்மயமாக்க அரசு நான்கு வழிவகைகளை மேற்கொண்டது. அவை: சுஜலம் சுபலம் (நீர் சேகரிப்பு), சொட்டு நீர்ப் பாசனம், ஆற்றல் பாதுகாப்பு குறித்த பெரும் கவன ஈர்ப்பு, ஜோதிக்ராம் யோஜ்னா (கிராம மின்னொளித் திட்டம்).

வீடியோ :

இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று மின் தட்டுப்பாடு. ஆனால் குஜராத்தோ இன்றும் 600 மெகாவாட் உபரி மின் உற்பத்தி உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. இதில் 220 மெகாவாட்டை தமிழ்நாட்டுக்கும், 200 மெகா வாட்டை கர்நாடகத்துக்கும் வழங்கியுள்ளது குஜராத் மாநிலம்.

குஜராத் கிராமங்களை மின்மயப்படுத்தியது, இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், உலக நாடுகள் பலவற்றுக்கும் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல.

பத்தாண்டுகளுக்கு முன் சீரற்ற மின்சாரம், மின்வெட்டு என்றிருந்த குஜராத்தில் இப்போது சீரான மின்சாரம் கிடைக்கிறது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

இது எதனால் சாத்தியமானது? நரேந்திர மோடியின் அறிவில் உதித்த ஜோதிக்ராம் திட்டத்தால்தான்.

18742 கிராமங்கள், 9680 நகர்ப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்கியது இந்த ஜோதிக்ராம் திட்டம்தான்.

குஜராத்தின் கிராமங்களில் இந்தத் திட்டம் புரட்சிகர மாறுதல்களையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் அதிசயிக்கத் தக்க மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தை ஜஸ்ட் 30 நாட்களில் செயல்படுத்தி, நாட்டிலேயே 100 சதவீத மின்மயமான மாநிலம் என்ற பெருமையைச் செய்துள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.

இதன்விளைவு, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது குறைந்து, இப்போது ‘கிராமநகரம்’ (RURURBAN) என்ற புதிய அமைப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் 21 ஆறுகளில் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்திக் கொள்வது எத்தனை முக்கியமானது என்பதை ‘ஆற்றல் சக்தி’ நிரூபித்துள்ளது. இந்த ஆறுகளில் தடுப்பணைகள், பண்ணை குளங்கள் மூலம் 2.25 லட்சம் புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீர்ப்பாசன வசதியையும், சர்தார் சரோவர் அணை மூலம் மின்சக்தியின் பலன்களையும் மக்களுக்கு அளித்துள்ளது அரசு.

மறுபயன்பாட்டு ஆற்றல் சக்திகளான சூரிய ஒளி, இயற்கை வாயு மற்றும் சாண எரிவாயு போன்றவற்றைப் பயன்படுத்தி குஜராத்தை உலகின் மின்சக்தி மையமாக மாற்றுவதே முதல்வரின் லட்சியமாகும்.

ரூ 1900 கோடியில் மாநிலத்தை தேசத்தின் மின்சக்தி மையமாக மாற்றியதன் மூலம் தேசத்தின் மூவர்ணக் கொடிக்கு தனது வணக்கத்தைச் செலுத்துகிறது குஜராத். மின்சக்தித் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியை மூவர்ணக் கொடியின் காவி நிறமும், பால் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ள புரட்சியை வெண்மை நிறமும், விவசாயத்துறையில் செய்யப்பட்டுள்ள புரட்சியை பச்சை நிறமும் குறிப்பதாக உள்ளது.

ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிகல்ஸ் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள்:

மின் உற்பத்தி வரலாற்றில் 18000 மெவா உற்பத்தி செய்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 4742 மெவா அதாவது 36 சதவீதம் அதிகம். மின் உற்பத்தில் இது மிகப் பெரிய சாதனை.
மின் திறன் மற்றும் தரத்தை உயர்த்த 105 துணை மின் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கிஸான் ஹிட் உர்ஜா சக்தி யோஜ்னா திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் சரியான வோல்டேஜில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ரூ 248 கோடி ஒதுக்கீடு.
4822 சர்க்யூட் கிலோமீட்டர் புதிய மின்வழித் தடங்கள் அமைக்க ரூ 1382.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறையைப் பொருத்தவரை மின்சாரம்தான் முக்கியம். வணிக பயன்பாட்டுக்கான மின்சாரத்தை வழங்குவதில் நல்ல சாதனையைப் படைத்துள்ளது. மின்சாரத்தை சீராகவும் தரமாகவும் வழங்க மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது குஜராத் அரசு.

இதற்காக, மின் கட்டணத்தை சரிப்படுத்துவது,

மரபு சாரா வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துவது, மின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம், நுகர்வோருக்கு தரமான சேவை போன்றவற்றில் கவனம் செலுத்தப் போகிறது.

மறுபயன்பாட்டு ஆற்றல் சக்திகளைப் பயன்படுத்துதல், உலகின் தட்பவெப்ப சூழலைக் காத்தல் போன்றவற்றில் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1000 மெவா மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான பணியை 34 சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது நரேந்திர மோடி அரசு.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service