ஆறு மாதம் மட்டுமே, ஆட்சியில் இருக்கப் போகிறீர்கள். நீங்கள் செய்த தவறுகளை, நாங்கள், மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம்”

October-26-13

‘காங்கிஸ் மேலிடம், சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தி, பா.ஜ., தலைவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வைக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருக்கப் போவது, இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் தான்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

Narendra Modi addresses massive public meeting in Udaipur

பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் நடந்த, பிரசார கூட்டத்தில், நேற்று பேசியதாவது:சமீபகாலமாக, ராஜஸ்தானிலும், குஜராத்திலும், மத்திய அரசு சார்பில், ஏராளமான திட்டங்களுக்கான துவக்க விழாக்கள் நடக்கின்றன. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும், கத்திரிகளுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் இளவரசர், தன்னை மதச் சார்பற்றவர் என, கூறுகிறார்.ஆனால், மத கலவரங்களை தூண்டும் வகை யில், அவர் பேசுகிறார். ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அசோக் கெலாட்டிடம், ராகுல், ஆதரவு கேட்டதாக கூறுகின்றனர்.

Narendra Modi addresses massive public meeting in Udaipur

கெலாட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தானே? அவர் மீதே, ராகுலுக்கு நம்பிக்கையில்லையா? தன், அரசியல் லாபத்துக்காக, சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, காங்., தலைமையிலான, மத்தியஅரசு, தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது, வழக்குகள் போடுவதற்காக, சி.பி.ஐ., அமைப்பு, பயன்படுத்தப்படுகிறது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மீதும், பல்வேறு வழக்குகள் உள்ளன. காங்., கட்சியினருக்கு, ஒரே ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.நீங்கள், இன்னும், ஆறு மாதம் மட்டுமே, ஆட்சியில் இருக்கப் போகிறீர்கள். அதற்கு பின், நீங்கள் செய்த தவறுகளை, நாங்கள், மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service