குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி தனி மாவட்டம் அறிவித்ததற்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்–மந்திரி நரேந்திர மோடி பேசும்போது கூறியதாவது:–
பிரதமருக்கு கீழே உள்ளவர்கள் அதிக ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊழல் பரவிவருவது பிரதமர் பதவியின் பெருமையை அழித்துவிடும். 1974–ம் ஆண்டு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தியதுபோல இப்போது ஊழல் ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை விடுவிக்க இளைஞர்கள் போராட வேண்டும். அந்த நிலை வந்தால் தானாக மாற்றம் வந்துவிடும். இவ்வாறு மோடி கூறினார்.
குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்த முதல் மந்திரி நரேந்திர மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததையடுத்து, புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டது.மக்களின் கோரிக்கைகளை பெற்று மாநில தலைமை செயலாளரின் கண்காணிப்பில் இந்த குழு எடுத்த முடிவின் அடிப்படையில் புதிததாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 26 ஆக இருந்த குஜராத் மாநில மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயரும்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.