ஆன்லைனில் வாக்களிப்பதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம்”

July-30-13

தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி விஸ்வ ரூபமெடுத்திருக்கும் நிலையில் ஆன்லைனில் வாக்களிப்பதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. சமூக வலை தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கைப் போன்று யூ டியூப்பும் அற்புதமான ஒன்று என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்திநிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது, தற்போதையகாலம் என்பது தகவல்தொழில்நுட்ப மற்றும் அறிவு சார்ந்தது. எந்த ஒரு தனி நபரும் அல்லது தனி அமைப்பும் இந்தவிவகாரத்தில் உரிமை கொண்டாட முடியாது.

இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்தலைவரும் நாட்டின் இளைஞர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலை தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கைப் போன்று யூடியூப்பும் அற்புதமான ஒன்று. பல்வேறு முக்கியசம்பவங்கள் இத்தகைய சமூக வலைதளங்களில் தான் உடனடியாக வெளியாகின்றன.

அண்மையில் உத்தர்காண்ட்பேரழிவு சம்பவம் தொடர்பாக சமூக வலை தளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. காணாமல்போன உறவினர்களை மீட்பதில் இந்த சமூக வலை தளங்கள் பெரும்பங்கு வகித்தன. இத்தகைய சமூக வலைதளங்களை எந்தஒரு தனிநபரும் அமைப்பும் கட்டுப்படுத்தி விட முடியாது. அண்மையில் கூட மும்பை ஹோட்டலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக பில்லில் வாசகங்கள் இடம் பெற்ற சம்பவம் ஒருசெய்தித்தாளில் வந்தது. ஆனால் அந்தபிரச்சனை சமூக வலைதளத்தில் அதிகம்பேசப்பட்டது.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தும்போது நமது கலாசாரம் பண்பாடு ஆகியவற்றையும் மறந்துவிடக்கூடாது. எத்தனை நவீனவசதிகள் வந்தாலும் பெண்களை தெய்வமாகமதிப்பது நமது சமூகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்போதைய நவீனதொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப நமது தேர்தல் முறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அண்மையில்கூட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய எனது உரையில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். நாட்டின் ஜனநாயக நடைமுறைகளில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் சமூக வலை தளங்களையும் பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் என்பது விஸ்வ ரூபமாகிவிட்டது. இதனால் ஆன்லைனில் வாக்களிப்பது, வேட்பாளர்களை நிராகரிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய தேர்தல்சீருத்தங்கள் இப்போது அவசியமாகிறது என கூறியுள்ளார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service