அறிவு சக்தி – அறிவுத் திறனை மேம்படுத்துவது, சரியாகப் பயன்படுத்துவது”

February-6-14

“வறுமை, இயலாமை மற்றும் நோய்களுக்கு எதிராகப் போராட இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி ஒன்றுதான். கிராமங்களில் படித்த பிள்ளைகள், தங்கள் கிராமங்களில் உள்ள படிக்காதவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, அவர்களையும் படித்தவர்களாக்க வேண்டும்”- நரேந்திர மோடி

மாற்றத்துக்கான தொலை நோக்கு – சரியான பாதையில் ஒரு மாற்றம்

பஞ்சமிர்தக் கொள்கையின் இரண்டாவது முக்கிய சாரம் இந்த அறிவு சக்தி. இந்த அற்வு சக்தியைப் பயன்படுத்தி குஜராத் நவீன பாதையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. விஷன் குஜராத் மூலம் 21-ம் நூற்றாண்டின் அறிவாற்றல் கொண்ட சமூகத்தைப் படைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவின் சக்தி இந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவ வேண்டும் என்பதே பனே குஜராத், ஜிதே குஜராத்.

பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய ஷாலா ப்ரவேஷோத்சவ், கன்யா கேலவணி, குணோத்சவ் போன்ற திட்டங்களின் பலன் இப்போது நன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது. கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவர முதல்வர் நரேந்திர மோடி, அவரது தலைமையில் இயங்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், செயலாளர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் இந்தக் குழு, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களின் பெற்றோருக்குப் புரியவைத்து குழந்தைகளை பள்ளிக்குச் சேர்க்க வைக்கின்றனர்.

சத்துக் குறைப்பாட்டைக் கண்டறிந்து அதை அடியோடு நீக்க பால் போக் என்ற திட்டத்தை குஜராத் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மதிய உணவு, இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்களை கல்வித் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து செயல்படுத்துகின்றன.

‘அனைவருக்கும் அறிவு’ திட்டம், 1-5 வகுப்புகளில் பள்ளியிலிருந்து இடையில் நிற்கும் மாணவர்கள் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. 2000-2001-ல் பள்ளிகளில் இடையில் நிற்கும் மாணவர் வீதம் 20.93 சதவீதம். 2010-2011-ல் இது 2.09 சதவீதம்.

இனி வரும் நாட்களில் கிராம மக்கள் அனைவரும் அறிவும் – தகவல் விழிப்புணர்வும் கொண்டவர்களாக மாறும் வகையில் அரசு திட்டம் மேற்கொள்ளவிருக்கிறது.

அறிவுதான் அதிகாரமும் – அறிவு சக்தி

வீடியோ:

அறிவு சக்தியின் கீழ் குஜராத்தில் மாற்றங்களைக் கொண்டுவர, குஜராத் உலக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாரியம், அறிவு சக்தி ரத், வித்யலக்ஷ்மி யோஜனா, ஷாலா ப்ரவேஷோத்சவ், கன்யா கேலவணி ரத், தொழில்நுட்ப கல்வி மற்றும் கூடுதல் சேர்க்கைப் பதிவு, குணோத்சவ், வித்யா சஹாயக்ஸ், வித்யா டீப் யோஜனா, ஸ்கோப் லாங்வேஜ் புரோக்ராம், மற்றும் குஜராத் அறிவு மையம் போன்ற அமைப்புகள் மற்றும் திட்டங்கள் மூலம் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மனித வள மேம்பாட்டை முன்னிறுத்தி அறிவு சக்தி சிறப்புப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியுள்ளது. குழநேதைகள் பல்கலைக் கழகம், ரக்ஷா சக்தி பல்கலைக் கழகம் மற்றும் தடயவியல் அறிவியல் பல்கலைக் கழகம் போன்றவை இப்படி உருவானவையே.

வீடியோ:

குஜராத் அறிவு மையம் சார்பில் தொடங்கப்பட்ட சப்ததரா யோஜ்னா திட்டம் மாநில இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கலாச்சார மேம்பாட்டை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு ஆழமான அறிவைத் தரும் வழிவகைகளை ஊக்கப்படுத்தும் திட்டம் இது.

இதன் ஏழு பிரிவுகள்: க்யான் தரா, சர்ஜனத்மக் அபிவ்யாக்தி தரா, நாட்ய தரா, கீத் சங்கீத் ந்ருத்ய தரா, ரங் கலா கௌஷல்யா தரா, சமுஹிக் சேவா தரா மற்றும் வ்யாயம் யோக் கேல்குட் தரா.

இளைஞர்களுக்கான ஆற்றலை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. 2009-ம் ஆண்டு தொழில்கொள்கையில் இன்குபேட்டர்ஸை அமைத்த அரசு, அதன் மூலம் இளம் தொழில்நுட்ப முனைவோர்களை கண்டறிந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் ஏராளமாய் உருவாக வழி பிறந்தது.

இன்றைய சூழலில் டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் உலக அறிவு அவசியம். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் மின்னணு நூலகங்களாக மாற்றி, அனைவருக்கும் கணிப்பொறி மற்றும் இணையத் தொடர்பை உருவாக்கி அறிவுப்பசியை தணித்து வருகிறது.

பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

நீங்கள் மகனை படிக்க வைத்தால், ஒருவருக்குத்தான் கல்வி தருகிறீர்கள். ஆனால் மகளை படிக்க வைத்தால் மொத்த குடும்பத்துக்குமே கல்வி தருவதற்கு நிகராகும். ஒரு பெண்தான் அந்தக் குடும்பத்துக்கே கல்வி தருகிறாள், என்பது நரேந்திர மோடியின் எண்ணமாகும்.

வீடியோ:


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service