அரசியலில் கிரிமினல்களை ஒழிப்பது தான், எங்கள் அரசின் முதல் வேலை. துப்பாக்கிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும், அரசியலில் இனிமேல் வேலை இருக்காது”

May-5-14

நாடு முழுவதும், 3 லட்சம் கி.மீ., சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 400 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ள மோடி, அமேதி தொகுதியில்  அனல் பறக்கும் விதத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவரின் முந்தைய கூட்டங்களில் இல்லாத ஆவேசமும், உற்சாகமும் இந்த கூட்டத்தில் காணப்பட்டது.லட்சக்கணக்கான பா.ஜ.,வினர் முன்னிலையில், பா.ஜ., வேட்பாளர்,  ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து, மோடி பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், இந்த தொகுதியின் வேட்பாளருமான ராகுலும், எந்த கூட்டங்களிலும், என் பெயரை சொல்வதில்லை. ஆனால், நாடு முழுவதும், ‘மோடி, மோடி’ என, மக்கள் அழைக்கத் துவங்கிய பின், வேறு வழியின்றி, என் பெயரை, சோனியாவும் சொல்லத் துவங்கியுள்ளார். நேற்று முன்தினம், இங்கு பேசிய சோனியா, நான் பிரதமர் பதவிக்கு வந்து விட்டது போல் பேசிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்; உங்கள் வாக்கு பொன்னாகட்டும். ஏழைத் தாயின் இந்த மகனால், இது போல் தாழ்மையாக பேசத் தான் முடியும்.

நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வர, தாமரை சின்னத்திற்கு அதிக ஓட்டுகள் வேண்டும் என, பிரசார கூட்டங்களில் நான், மக்களை கெஞ்சி கேட்கிறேன். அது, சோனியாவுக்கு பிடிக்கவில்லை. என்னால் தாழ்மையாக கேட்கத் தான் முடியும்; இதற்காக நான் வெட்கப்படுவதில்லை.

amethi-050514-in2

அரசியலில் கிரிமினல்களை ஒழிப்பது தான், எங்கள் அரசின் முதல் வேலை. துப்பாக்கிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும், அரசியலில் இனிமேல் வேலை இருக்காது. அரசியலை சுத்தப்படுத்துவது தான், என் முழு நேர பணியாக இருக்கும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், இந்த மாநிலத்தை ஆளும் அகிலேஷ் அரசும், விவசாயி கள், ராணுவ வீரர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அந்த நிலை, எங்கள் அரசில் இருக்காது. விவசாயிகளுக்கு, எல்லா செலவும் போக, 50 சதவீத லாபம் கிடைக்கும் வகையில், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த இரு கட்சிகளும், இந்த மாநிலத்தில் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால், டில்லியில், ஆட்சி அமைக்கும் போது, ஒன்று சேர்ந்து விடுகின்றன.

Shri Narendra Modi addresses a massive rally in Amethi, Uttar Pradesh
இவர்களின் ஆட்சியில், நாட்டின் முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதை அறிந்த நான், உலகிலேயே மிக உயரமான சிலையை அவருக்காக நிர்மாணிக்க முடிவு செய்துள்ளேன்.

 

நாடு முழுவதும், 4,000 அல்லது, 5,000 திட்டங்களுக்கு, நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன; ஒரு திட்டத்திற்கு கூட, சர்தார் வல்லபாய் படேல் பெயர் கிடையாது. அதனால் தான், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட, இரண்டு மடங்கு அதிக உயரத்தில், படேலுக்கு சிலையை அமைக்கப் போகிறேன். நம் ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக எதுவும் செய்யாத இந்த தாய் – மகன் அரசு, விவசாயிகளுக்கும், எதுவும் செய்யவில்லை. இவர்கள் ஆட்சியில், 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்த தொகுதியை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வசம் வைத்திருக்கும், சோனியா குடும்பத்தினரால், துளி கூட இந்த தொகுதி முன்னேறவில்லை. இந்த தொகுதியை முன்னேற்றிக் காட்டுவதற்காகத் தான் என் இளைய சகோதரி, ஸ்மிருதி இரானியை இங்கே நிறுத்திஉள்ளோம்.

ஏற்கனவே ஏராளமான சங்கடத்தில் சிக்கித் தவிக்கும் ராகுலுக்கு, கூடுதல் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்மிருதி இரானியை இந்த தொகுதியில் நாங்கள் நிறுத்த வில்லை; மாறாக, இந்த தொகுதிக்கு நிறைய செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், ஸ்மிருதி இங்கு போட்டியிடுகிறார். இதன் மூலம், இறுமாப்புடன் பேசும், சோனியா மகள் பிரியங்காவுக்கும் இந்த தொகுதி மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் பணியை, அமேதியில் இருந்து துவக்குவேன். ஆட்சிக்கு வந்த, 60 மாதங்களில், உ.பி.,யை மாற்றிக் காட்டுவேன். ராமர் பிறந்த பூமி இது. நம்பிக்கை பொய்த்துப் போனாலும், சொன்ன சொல் தவறக்கூடாது என்பதை உணர்த்திய பூமி இது. இந்த பூமியில், ஏராளமாக சொல்லி, எதையுமே செய்தவர்களை நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள்.காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தோற்கடியுங்கள்; பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள். மத்தியில் ஆட்சியிலிருக்கும் நோஞ்சான் அரசை வீழ்த்த, உ.பி.,யின், 80 தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். வலிமையான அரசை மத்தியில் ஏற்படுத்த, இந்த மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும். நீங்கள் அந்த வெற்றியை உறுதி செய்தால், மத்தியில் வலுவான அரசை ஏற்படுத்துவேன்.இவ்வாறு, மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த தொகுதியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சோனியா மற்றும் அவரின் குடும்பத்தினர் தான் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்களை ஒருபுறமும், எங்கள் வேட்பாளர் ஸ்மிருதியை மறுபுறமும் நிற்க வைப்போம். தொகுதியில் உள்ள, 100 பெயர்களை ஸ்மிருதி கூறி விடுவார்; ராகுலால், பத்து ஊர் பெயர்களைக் கூட கூற முடியாது.நான், குஜராத்தில் நான்கு முறை முதல்வராக உள்ளேன். என் தாய்க்கு, 90 வயதாகிறது. ஓட்டளிக்க அவர், ஆட்டோ ரிக் ஷாவில் தான் சென்றார். ஆனால், இந்த தொகுதியின் எம்.பி., ராகுல் எத்தனை படை, பட்டாளங்களை கொண்டு வருகிறார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே.இவ்வாறு மோடி கிண்டலாக பேசினார்

amethi-050514-in3

amethi-050514-in4

amethi-050514-in5

amethi-050514-in6


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service