குஜராத் முதலமைச்சர் திரு.நரேந்திர மோடி , காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்ற ‘அக்ரிடெக் ஆசியா’ கண்காட்சியினை திறந்து வைத்தார் . இந்த நவீன மேம்பட்ட கண்காட்சியானது ‘வைப்ரன்ட் குஜராத் குளோபல் அக்ரிகல்ச்சர் சம்மிட்’ இன் ஒரு பகுதியாகும் .
பிற மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த விவசாயிகள் குழுக்களின் மத்தியிலும் , குஜராத் விவசாயிகள் மத்தியிலும் உரையாற்றிய திரு.மோடி , இந்த கண்காட்சி ஆராய்ச்சி அடிப்படையிலான விவசாயத்திற்கு தேசிய பொருளாதாரத்தில் உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சி என்றார் . இது ஒரு சரித்திர சிறப்பு வாய்ந்த ஒன்று .
இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும் தான் இப்படி பட்ட ஒரு மாநாடு நடத்தப்பட்டுள்ளது . 14 நாடுகளும் , 23 இந்திய மாநிலங்களும் இதில் பங்கேற்றன .
‘அக்ரிடெக் ஆசியா’ தான் இந்தியாவில் நடத்தப்பட்டிருக்கும் கண்காட்சிகளிலேயே , மிகப்பெரிய கண்காட்சி என திரு.நரேந்திர மோடி கூறினார் . இஸ்ரேல் விவசாயத்தில் வளர்ச்சிப்பெற்று சிறந்துவிளங்குகின்றது என்றும் கூறினார் . இதுபோன்ற மாநாடுகளை(சம்மிட்) , மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தும் . இந்த கண்காட்சி, நவீன விவசாய தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்வதற்கு உதவும் என்றார் . குஜராத் அரசின் இந்த செயல் திட்டம் , இந்திய விவசாயிகளுக்கு முக்கியமானதாகும் .
விவசாயம் , புது இயந்திரங்கள் , விதைகள் , சந்தை இயக்கவியல் ஆகியவற்றை விவசாயிகள் எளிய முறையில் கையாளுவதற்காகத்தான் இந்த சர்வதேச விவசாய மாநாடு மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது . இந்த கண்காட்சி , செப்ட். 09 முதல் 12 வரை நடைபெறுகின்றது . விவசாயிகளைத் தவிர பொது மக்களும் இந்த கண்காட்சியை காண வரலாம் .
இந்த கண்காட்சி 15,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடத்தப்பட்டுள்ளது . 250 க்கும் மேற்ப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றன . இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது .
இந்த கண்காட்சி , விவசாயத்துறையின் 25 பகுதிகளை கொண்டுள்ளது . நீர் பாசனம் , க்ரீன்ஹவ்ஸ் பிளாஸ்டிகல்ச்சர் , வேளாண் தொழிலகங்கள் , பால் தொழில்நுட்பம் , கால்நடை புனைதல் , கால்நடை வளர்ப்பு , உரம் , வேளாண் இரசாயனங்கள் , உணவு தொழில்நுட்பம் இடம் பெற்றிருந்தன .
நன்றி தமிழில் ; சமீரா வெங்கடேஷ்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.